தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி மாணவர்கள் அவதி சிமெண்ட் தளம் அமைக்க கோரிக்கை!!!

sen reporter
0

விளாத்திகுளம் அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெய்த லேசான மலையின் காரணமாக பள்ளி வளாகங்கள் முழுவதும் மழைநீர் தேங்கியதால். பள்ளி மாணவ மாணவிகள் சேற்றுக்குள்ளும் சகதிக்குள்ளும் நடக்கும் அவல நிலை உள்ளது. பள்ளி வளாகத்திற்கு வெளியே அதிக அளவில் காலியிடங்கள் இருந்தும். பள்ளி வளாகங்களுக்குள் கட்டுமான பொருட்களை கட்டுமான பணியாளர்கள் வைத்து இடையூறு செய்வதும். கட்டுமான பணி பொருட்கள் செய்யும்போது ஆங்காங்கே சிதறி கிடக்கும் பெரிய அளவிலான ஆணிகள் மற்றும் சிறிய கட்டைகளினால் பள்ளி மாணவ மாணவிகளின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் நிலை உள்ளது.பள்ளி வளாக வாயிலில் தண்ணீரை தாண்டி செல்வதற்காக மிதப்பு கட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் காலில் வெரும் காலில் செருப்பு இல்லாமல் நடப்பதால் அந்த மிதப்பு கட்டைகளில் உள்ள ஆணிகள் வெளியே நீட்டியபடியும். மரக்கட்ட சீராய்கள் பள்ளி மாணவ மாணவிகளின் கால்களில் குத்தும் நிலையில் உள்ளது. அதேபோல் பள்ளி மாணவ மாணவிகள் உணவு இடைவெளியின் போது கைகளை கழுவும் இடம் அருகே கழிவு நீரை தேக்கி வைப்பதற்காக சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு.அந்தப் பள்ளம் உரிய பாதுகாப்பு இன்றி உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் காலணிகளை அணிந்து வகுப்பறைக்குள் வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வெறும் காலில் மழை சகதிக்குள் நடக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் நிலை உள்ளது. அதேபோல் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலேயே அறைய எடுத்து தங்குவதாகவும். இதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகவும். பணியாளர்கள் ஆபத்தான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால். பள்ளி வளாகத்துக்குள் ஆங்காங்கே இருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காதவாறு உடனடியாக சிமெண்ட் தளம் அமைத்து. கட்டுமான பணியாளர்களையும், கட்டுமான பொருட்களையும் பள்ளி வளாகத்திற்குள் இருந்து வெளியே அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top