வேலூர்:அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி!!!

sen reporter
0

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும், யூனிசெஃப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் குறித்த செறிவூட்டல் ( Science, Technology, Engineering, and Mathematics - STEM) திட்டத்தை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைமுறைபடுத்தபடுகிறது. வேலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி இன்று (10.11.2025)  காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா  தலைமை வகித்து பயிற்சியினை தொடங்கி வைக்கிறார்.  இப்பயிற்சி  திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் அ.அரவிந்த், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ச.சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பயிற்சி கருத்தாளர்கள் பி.ரவீந்திரன், பிரகாஷ் ஆகியோர் பயிற்சிகளை ஒருங்கிணைக்கின்றனர். இத்தகவலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ. நா. ஜனார்த்தனன் விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top