வேலூர்:பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் சங்க கூட்டம்!!!!
11/13/2025
0
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு விவசாயிகள் சங்க கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. ராஜ்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் ஜெயந்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வேளாண்மை துறை ஏ.பி. உமாசங்கர், தோட்டக்கலை உதவி இயக்குநர் கிருத்திகா தேவி, வேளாண்மை துறை அலுவலர் திவ்யஸ்ரீ, மேல்பட்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகவேல், உதவி வேளாண்மை துறை அலுவலர் திவ்யா, எஸ்.ஐ. ரமாபாய், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சுகப்பிரியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன் மற்றும் மின் துறை சுமதி, மாதேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தலித் நா.சே. பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
