வேலூர்:மதச்சார்பின்மையில்இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!!!

sen reporter
0

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15-ம் தேதி திருச்சபையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சீயோன் பெந்தகொஸ்தே சபையின் தலைமை போதகர் இம்மானுவேல் பால் வரவேற்புரையாற்றினார். விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோருக்கு லிடியா இமானுவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ,மேயர் சுஜாதா வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ஒழுக்கம், சமாதானம், மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது மூலம் கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ்சை சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள் .இந்த மாவட்டத்தில் இருக்கிற பெரும்பான்மையான சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த அவ்வளவு மக்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் அவ்வளவு மக்கள் தொகை இருந்தாலும் இங்கே மிகுந்த நல்லிணக்கத்தோடு வாழ்ந்து ஒரு சமுதாயத்திற்கும், இந்திய திருநாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக நம்முடைய வேலூர் மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த மாவட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு திருச்சபைகளும், அதுபோல ஒவ்வொரு மசூதிகளும்தான் காரணம். அவர்களால்தான் இந்த மாவட்டத்திற்கு மத நல்லிணக்கத்திற்கு பேர் போன மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்குவதற்கு ஒரு நீங்கள் அனைவரும் காரணம். அந்த வகையில நம்முடைய சியோன் பெந்தேகொஸ்தே சபையை வழிநடத்திக் கொண்டிருக்கிற பாதிரியாரையும், இந்த திருச்சபையினுடைய அத்தனை உறுப்பினர்களுக்குஆம் இந்த நேரத்தில்நாங்கள்மீண்டும்ஒருமுறைநன்றிகூறுகிறோம். எங்கெல்லாம் கூட்டுப்பிரார்த்தனைநடைபெறுகிறதோ அங்கெல்லாம் மக்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும், தங்களுடைய தவறை உணரக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பும், ஒருவரை, ஒருவர் புரிந்துகொள்ளக்கூடிய, பக்குவப்படுத்தக்கூடிய, வழிநடத்தக்கூடிய ஒரு நல்ல செயல்கள் நடைபெறுகிறது என்பதற்கு இந்த ஒவ்வொரு திருச்சபைகளின் நல்ல செயல்பாடுகள் தான் ஒரு சான்று. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த சியோன் பெந்தேகொஸ்தே திருச்சபை, மிக நல்ல வகையிலே செயல்பட்டு இன்று 21-வது ஆண்டிலே அடி எடுத்து வைத்திருக்கிறது என்பதற்காக மீண்டும் ஒருமுறை இந்த சபையினுடைய அத்தனை உறுப்பினர்களுக்கும் நம்முடைய பங்குதந்தைக்கும் எங்களுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.நம்முடைய வேலூர் எம் எல் ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு எம் எல் ஏ கூறியது போல் மனிதனுக்கு தேவை கண்டிப்பாக அவங்களை வழிநடத்தக்கூடிய நல்ல கதைகள், கருத்துக்களை இளம் வயது பருவத்தில் சொன்னால், அவையெல்லாம் பசுமரத்து ஆணி போல மனதிலே பதிந்து, வாழ்க்கை முழுக்க அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக திகழும். அந்த வகையிலே நாங்களும் கிறிஸ்தவப் பள்ளியிலே படித்த காரணத்தினால் அந்த மதிய நேரங்களில் மாரல் ஸ்டோரிஸ் எங்களுடைய ஆசிரியை சொல்லுவார்கள். பைபிள் கதைகள் சொல்லுவார்கள். அதில் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு கருத்தைச் சொல்லி, அவை இன்றும் பல நேரங்களிலே நம் காதிலே ஒலிக்கக்கூடிய வகையிலே உள்ளது.அவைகள் தான் நம்மை நம் அனைவரையும் வழிநடத்தக்கூடிய ஒரு நல்ல விஷயங்கள்.இந்த திருச்சபைக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லி, அதுபோல தமிழ்நாடு அரசு அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை நமக்கெல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அவைகளை தெரிந்துகொண்டு இந்த சபையின் மூலமாகவும் அனைத்து மக்களுக்கும் அரசினுடைய அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக சென்று சேர வேண்டும் என்பதற்கும் நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த சிறப்பு ஜெப கூடுகைக்கான ஏற்பாடுகளை எஸ்ரா ஜானதன் மற்றும் பெஞ்சமின் ஜாஷ்வா ஆகியோர் விமரிசையாக செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top