கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்!!!

sen reporter
0

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் - ஜூவல்லரி சார்பில், மூன்று நாட்கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.இதன் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த வைர நகை கண்காட்சியை தனிஷ்க்-கின் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் இந்த கண்காட்சியை காணக்கூடிய வாடிக்கையாளர்கள், தனிஷ்க் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் தனிஷ்க் நிறுவனத்தின் சர்க்கிள் பிசினஸ் மேலாளர் சந்திரசேகர் பேசுகையில்:- முதல்முறையாக தனிஷ்க் சார்பில் கோவையில் இப்படி ஒரு உயர் மதிப்பு கொண்ட வைர நகைகளின் 3 நாள் கண்காட்சியை நடத்துவதாக கூறினார். இந்த கண்காட்சியின் போது வாங்கப்படும் வைர நகைகளில் 20% வரைக்கும் (வைரத்தின் மதிப்பில் இருந்து)தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.டிசம்பர் மூன்று நாட்களுக்கு தாஜ் விவான்தா ஹோட்டலில் இந்த உயர் ரக வைர நகை கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தனிஷ்க்- கின் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில், இந்த வைர நகை கண்காட்சிக்கு 1000க்கும் அதிகமான டிசைன்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நகையை அன்றே வாங்கலாம் அல்லது அதன் 50% கட்டணத்தை செலுத்தி அந்த நகையை அன்றைய விலைக்கு முன்பதிவு செய்துவைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top