தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா!!!
12/13/2025
0
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாரணர் இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.சாரணர் இயக்கத்தைச் சார்ந்த 21 மாணவர்கள் உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பாரத சாரணர் தேசிய திரளணியில் கலந்து கொண்டனர். அந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும்பாராட்டுவிழாபள்ளியில்நடைபெற்றது.தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் வரவேற்றார். சாரணர் இயக்க திருச்செந்தூர் கல்வி மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில், சாரணர் இயக்கத்தின் தோற்றம், வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் கிடைக்கக்கூடிய முன்னுரிமை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் வழிகாட்டுதலின்படி, பொருளாளர் ஆபிரகாம் இம்மானுவேல், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், சாரணியர் ஆசிரியை வளர்மதி, ஓவிய ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.
