திருவண்ணாமலை: செய்யாறு 100 நாள் வேலை செய்யும் பெண்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையை எடுத்து கூறிய அ.தி.மு.க.வினர்!!!

sen reporter
0

செய்யாறில் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில், பொறுப்பாளர்கள் எடுத்துக் கூறினர்.தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் அ.தி.மு.க.,வின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் முதற்கட்டமாக 5 தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். குலவிளக்கு பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய், ஆண்களும் அரசு நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தப்படும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை கிராம மக்களிடம் நேரில் சென்று பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் தலைமையில் கம்மந்தாங்கல், தென்கழனி, பெருமாந்தாக்கல் ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை செய்து வந்த பெண்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்தல் அறிக்கை குறித்து விளக்கி கூறினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளான ரங்கநாதன், சி.துரை, பாராசூர் பெருமாள், நிர்வாகிகளான பாண்டி பாலன், ரகு, தவமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top