கோவை மாநகரின் புதிய காவல் ஆணையராக கண்ணன் இன்று பதவியேற்றார்!!!
1/03/2026
0
கோவை மாநகரின் புதிய காவல் ஆணையராக கண்ணன் இன்று பதவியேற்றார்.தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சரவண சுந்தர் மேற்கு மண்டல ஐஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை பெருநகர (தெற்கு) சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர் கண்ணனை கோவை மாநகர காவல் ஆணையராக நியமித்து அரசு உத்தரவிட்டது.அதன்படி, இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கண்ணன், கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
