நீலகிரி:பந்தலூர் அருகே பெண் கொடூர கொலை 3வது கணவருக்கு தீர்ப்பு!!!!
2/08/2026
0
பந்தலூர் எருமாடு அருகே வெட்டுவாடி மடமூலா ஆதிவாசி காலனி பகுதியை சேர்ந்தவர் யசோதா(52). இவரின் 3-வது கணவர் சந்திரன்(36). இவர்கள் ஆதிவாசி காலனி பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். சம்பளப் பணம் தொடர்பான தகராறில், யசோதாவை கல்லால் அடித்து சந்திரன் கொலை செய்துள்ளார். 2025-ல் நடந்த இக்கொலை வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம் ஆயுள் தண்டனை (ம) ரூ.2,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
