திருவண்ணாமலை மாவட்டம்:செய்யாறு கலைஞர் சிலை அருகே கலைஞர் பாஸ்கரன் ஏற்பாட்டில் அன்னதானம்!!!!
2/08/2026
0
செய்யாறு கலைஞர் சிலை அருகே 38ம் நாளான நேற்று மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கலைஞர் பாஸ்கரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்களான என்.சங்கர், ஞானவேல், தினகரன், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், வெங்கடேஷ் பாபு ஆகியோர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், நகர செயலாளர் விஸ்வநாதன், புரிசை சிவக்குமார், கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து தி.மு.க., பொறுப்பாளர்களான தங்கராஜ், ராஜதுரை, கோபு, சரத்பாபு, துரை, கவுன்சிலர்கள் ரமேஷ், அண்ணாதுரை, சூரியபிரகாஷ் , தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மனதார வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றனர்.
