வேலூரில் மயான கொள்ளை திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு கழிஞ்சூர் தேர் பாதியில் கவிழ்ந்து விபத்து 7 பேர் படுகாயம்!!!!
2/17/2026
0
வேலூரில் நடைபெறும் திருவிழாக்களில் மயான கொள்ளை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த மயான கொள்ளை திருவிழா கடந்த 150 ஆண்டுகளாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் பாலாறு உள்ளது. இந்த பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடந்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா வழக்கம் போல் நடைபெற்றது. 80 அடி உயரமுள்ள தேரில் அங்காளம்மனை அமர வைத்து அலங்கரித்து மின்விளக்குகளால் அதை ஜோடித்து வீதிகளில் உலா வருவது வழக்கம். அப்படி தோட்டப்பாளையம், வேலூர் மற்றும் விருதம்பட்டு, கழிஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள அங்காளம்மன் சிலைகளை (உற்சவர்) ஜோடித்து பாலாற்றங்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி செய்து மீண்டும் கோவிலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வழக்கமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் 80 அடிக்கும் மேற்பட்ட தேர்கள் அண்ணா மேம்பாலத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரியை கண்ட பின்னர் கோயிலுக்கு மீண்டும் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கழிஞ்சூரில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்த (80 அடி தேர்) அங்காளம்மன் இரவு சுமார் 12.30 மணி அளவில் திடீரென பாரம் தாங்காமல் சாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் சுமார் 7க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேருக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அருகில் இருந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்றி உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்வாறு கழிஞ்சூர் தேர் கவிழ்ந்ததால் அந்த பகுதி மக்கள் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து மயானக் கொள்ளை திருவிழா இடைவிடாது நடந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட காவல்துறையினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்காமல் போலீசார் தங்களது பணியில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
