கோவை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தினர்!!!

sen reporter
0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை ஒட்டி கோவை வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவச்சிலைகளுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.சின்னராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர்.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை அதிமுக வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையத்தில் அனைத்திந்திய அண்ணா திடாவிட முன்னேற்ற கழகம் கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் பகுதி கழகம் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்வில் கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவச்சிலைகளுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.சின்னராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினர்.முன்னதாக பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேட்டுப்பளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர பொறுப்பாளர் சசிகுமார், நகர செயலாளர் குருந்தசாலம், ரகுநாதன், குருடம்பாளையம் முன்னாள் தலைவர் ரவி, நாகராஜ், கணேசன், செல்வராஜ், ஜி பி மோகன்தாஸ், சரவணகுமார், ரவிச்சந்திரன், முத்துகுமார், கதிர்வேல், ஐ டி விங் அஸ்வின், மகளிர் அணி மகளிர் அணி காந்திமதி, சுசிலா, கலாவதி, கவிதா, லலிதாம்பிகை உள்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top