திருவண்ணாமலை:செய்யாறு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க.நகர செயலாளர் வெங்கடேசன் மரியாதை செலுத்தினர்!!!

sen reporter
0

செய்யாறு அ.தி.மு.க.,வின் நகர செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் - அன்னதானம் வழங்கப்பட்டது.செய்யாறு ஆரணி கூட்டு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடந்தது. இதைத்தொடர்ந்து செய்யாறு அரசு கலைக்கல்லூரி எதிரே, செய்யாறு பஸ் நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே என, நான்கு இடங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொது மக்கள் 1000 பேருக்கு அன்னதானம் - இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் அ.தி.மு.க., பொறுப்பாளர்களான ஜனார்த்தனன், ரவிச்சந்திரன் அருணகிரி, பூக்கடை கோபால், ரவி, மெய்யப்பன், அரங்கநாதன், சுரேஷ், துரை, இளையராஜா, சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top