வேலூர்:பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.,ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா!!!

sen reporter
0

 வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.,ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ். சந்திரா சேட்டு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி. வாசுகி பாண்டியன், எம். தேசமுத்து, துரை, திருமால், வழக்கறிஞர் ஆர் .ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் எஸ். ஆனந்தன், பிஎம்எஸ் சிவக்குமார், பால்காரர் சேகர், பத்திரிக்கையாளர் ராமு, ராஜாமணி, பன்னு ரவி, எஸ் .வி.மனோகரன் ,போன்மில் கண்ணன் ,கே.கார்த்திக் ராஜா, எம். சி .சந்தர், ஜி .எஸ்.கோபி, ஜி .எஸ்.ஜெகன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top