வேலூரில்:தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்!!!!
2/11/2026
0
தேர்தல் கால வாக்குறுதிகளின் படி 70வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஒய்வூதியம் வழங்கவும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட குறைபாடுகளை சரி செய்ய வேண்டியும், சத்துணவு, அங்கன்வாடி மற்றும் ஊராட்சி உதவியாளர்களுக்கான குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850/- ஆக வழங்கவும் தொகுப்பாக பெற்ற ஓய்வூதியம் (கமுடேசன்) பிடித்தம் செய்யும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைத்தல், மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்ட முடிவின் அடிப்படையில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகங்களில் தர்ணா போராட்டம் இன்று 10.02.2026 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலர் எதிரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்லம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி.ஞானசேகரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பி.குமரேசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் சி.ஞானசேகரன், ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், அஞ்சல் ஆர்.எம்.எஸ்.ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் எ.கதிர்அகமது மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.மாநில செயலாளர் பா.ரவி சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஜேயசந்திர பாக்கியராஜ் நன்றி கூறினார். இந்த தர்ணா போராட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட ஒன்றியத்திலிருந்து 50 பெண் தோழர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.தேர்தல் கால வாக்குறுதிகளின் படி 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரருக்கும் 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வழங்க வேண்டும், ஓய்வூதிய காப்பீட்டு தாரருக்கு காசில்லா மருத்துவம் உறுதி செய், உறுதிசெய் தமிழக அரசே உறுதி செய். உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
