வேலூர்:ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் வேலூரில் தர்ணா போராட்டம்!!!

sen reporter
0

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை 14.02.2026 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையில் நடைபெற்றது. தேர்தல் கால வாக்குறுதி அளித்த படி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் வழங்கிட வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். 1.1.2006 முதல் 19 ஆண்டுகள் பெற்று வந்த தேர்வுநிலை தர ஊதியம் ரூ.5400 வழங்கியதை தமிழ்நாடு மாநில கணக்காயரால் 2024ஆம் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தீடீரென மாநில கணக்காயர் குறைத்து ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் உள்ள ஆசிரியர்களுக்கு பலன்களை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள நிதி திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களும் பலன் பெறும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி.ஆறுமுகம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். முன்னதாக மாவட்ட பொருளாளர் .அ.சிவக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஜி.விநாயகம், மாவட்ட இணை செயலாளர்கள் ஏ.ஜெயதேவரெட்டி, கே.சேகர், இல.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அகில இந்திய பி.எஸ்.என்.எல்.,ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.ஞானசேகரன், ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம், மாநில செயலாளர் எ.ரவி, பி.குமரேசன், மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், அஞ்சல் ஆர்.எம்.எஸ்.,ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் எ.கதிர் அகமது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப்அன்னையா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.தாமோதரன், டி.என்.ஷோபா, எஸ்.சச்சிதானந்தம், எம்.சந்திரன், டி.மோகனவேலு, எஸ்.சேரலாதன், எஸ்.ஆறுமுகம், டி.தேவராஜ், எம்.நெப்போலியன், கே.பொன்னுசாமி என்.மோகன் உள்ளிட்டோர் பேசினர்.முடிவில் மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top