கோவையில்:மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது வைகோ கருத்து!!!

sen reporter
0

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 மத்திய நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துள்ளது என்றார்.கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்திருந்த போதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்கள் மீது சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை என குற்றம்சாட்டினார்.11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைசார்ந்ததல்ல. இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல என்றும் தெரிவித்தார்.கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார் . அதேபோல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும் வருத்தமளிப்பதாக கூறினார். இருப்பினும் சுங்கவரி குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என குறிப்பிட்டார்.அரசியல் நிலவரம் குறித்து பேசிய வைகோ, ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது மதிமுகத்தின் நோக்கம் அல்ல என்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும்;முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டளவில் நல்ல பெயர் இல்லை என்றும் விமர்சனம் செய்தார். இரட்டை இலக்கில் தொகுதிகள் குறித்த பேச்சுகள் தற்போது முன்கூட்டியே பேச முடியாது; கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தன்னுடைய பரப்புரை நடைபெறும் என்றும் வைகோ கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top