கோவை:துடியலூர் இந்தியா டிசைன் வீக் 2026 சவுத் கிராண்ட் பைனல் போட்டிகளை நடத்தினர்!!!

sen reporter
0

கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ஆட்டோடெஸ்க் நிறுவனம் மற்றும் ஐசிடி அகாடமி ஆகியோர் இணைந்து இந்தியா டிசைன் வீக் 2026 – சவுத் கிராண்ட் பைனல் போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் இந்தியா டிசைன் வீக் 2026 – சவுத் கிராண்ட் பைனல் போட்டிகள் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளை ஆட்டோடெஸ்க் நிறுவனம் மற்றும் ஐசிடி அகாடமி ஆகியோர் இணைந்து நடத்தினர். முன்னதாக இந்த போட்டிகள் 3 பிரிவுகளாக பிரித்து நடத்தப்பட்டது. முதல் பிரிவில் மாணவர்களுக்கான பயிலரங்குகள் நடைபெற்றன. இதில் பதிவு செய்த பங்கேற்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களிடமிருந்து ஆட்டோடெஸ்க் ஃப்யூஷன் 360 மற்றும் ஆட்டோடெஸ்க் ரெவிட் தளங்களில் பயிற்சி பெற்றனர். 2ம் பிரிவில் கல்லூரிகள் இடையிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துக்கொண்ட கல்லூரிகளின் மாணவர்கள் தங்களின் வடிவமைப்புகளை விளக்கினர். தொடர்ந்து இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்பின்னர் 3வது பிரிவாக நடைபெற்ற சவுத் கிராண்ட் பைனலில் 24 மணி நேர ஆன் சைட் டிசைன் போட்டிகள் இடம்பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5758 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர். இவர்களுக்காக நாடு முழுவதிலும் இருந்து 184 கல்வி மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கலந்துக்கொண்டு உதவி செய்தனர்.  

இந்த 24 மணி நேர ஆன் சைட் டிசைன் போட்டியில் ஆட்டோடெஸ்க் ஃப்யூஷன் 360 என்ற பிரிவில் தயாரிப்பு வடிவமைப்பு, இயந்திரவியல் உள்ளிட்டவைகளுக்கான டிசைன் போட்டிகளும், ஆட்டோடெஸ்க் ரெவிட் பிரிவில் கட்டிட தகவல் மாதிரியாக்கம், கட்டிடக்கலை டிசைன் போட்டிகளும் நடைபெற்றன. இதில் கலந்துக்கொண்ட அணிகள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்களது டிசைன்களை முடித்தனர். ஓவ்வொரு அணியின் டிசைன்களை தொழில்துறை வல்லுநர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் சளந்திரராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து பேசும்போது, இன்றிய மாணவர்களுக்கு இதுபோன்ற தளங்களை பயன்படுத்து முன்னேறும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதற்காக எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்வி நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்தார். ஐசிடி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்து பேசும்போது, கல்வி நிறுவனங்கள், தொழில் துறை வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும்போது, மாணவர்கள் தங்களை மேலும் வளர்த்துகொள்ள உதவுகிறது என்றார். இறுதியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா 20 ஆயிரம், 30 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டன. மேலும் கலந்துக்கொண்ட அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஆட்டோடெஸ்க் மூத்த மேலாளர் ஆனந்தபூஜாரி, ஆட்டோடெஸ்க் லீட் இந்தியா அகாடமி அகிலேஷ் சாஹி, அருண்குமார், தொழில்துறை வல்லுநர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணைமுதல்வர் கருப்புசாமி, ப்ரவீன்குமார் உள்ளிட்டவர்களை செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top