திருவண்ணாமலை:செய்யாறு25ஆண்டுகளாககட்சிப்பணிஆற்றியவந்தஅ.லோகுவிற்குநகரசெயலாளர்பதவிவழங்கியவி.சி.க.தலைவர் திருமாவளவன்!!!!
3/11/2026
0
செய்யாறு நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அ.லோகுவிற்கு செய்யாறு நகர செயலாளர் பதவியை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. இங்கு மண்டல செயலாளராக செ.நன்மாறன், மாவட்ட செயலாளராக ஆ.மதியழகன் ஆகியோர் பொறுப்பில் இருந்து வருகின்றனர். இவர்கள் இடும் கட்சிப் பணிகளை அ.லோகு சிறப்பாக செய்து முடிக்க கூடியவர். இதுதவிர கட்சி தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டங்களில் அ.லோகு முதல் நபராக முன்வந்து கலந்து கொண்டு தொண்டர்களை ஒருங்கிணைத்து நடத்தக்கூடிய வராக இருந்து வருகிறார். இதுதவிர செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரு ஊர்களுக்கிடையே கோயில் - பொதுவழிப் பிரச்சனை ஏற்படும் சமயங்களில், காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் 'சமாதான பேச்சு வார்த்தை' நடக்கும்போது வி.சி.க., சார்பில் அ.லோகுவுக்கு மேற்கண்ட அதிகாரிகள் அழைப்பு விடுத்து, இவரால் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வருவார்கள். இதனால், அ.லோகுவுக்கு கட்சி, அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடமும் நற்பெயரை பெற்று விளங்குகிறார். தேர்தல் சமயங்களில் கூட்டணி 'தர்மத்தை கடைப்பிடித்து' தேர்தல் பணிகளை சிறப்பாகச் செய்து கணிசமான ஓட்டுக்களை வாங்கிக் கொடுப்பவராக திகழ்ந்து வருகிறார். வி.சி.க.,வில் செய்யாறு நகர இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அ.லோகுவுக்கு இக்கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்யாறு நகர செயலாளராக பதவி உயர்வை கொடுத்து அழகு பார்த்துள்ளார். கட்சியில் உழைப்பை கொடுத்து, நேர்மையாக பணியாற்றி வருபவர்களுக்கு 'உயர் பதவிகள்' தானாகவே வந்து சேரும் என்பதற்கு வி.சி.க.,வின் அ.லோகு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்பதுதான் உண்மை. பதவி உயர்வு பெற்ற அ.லோகு, கட்சி தலைமைக்கும், மண்டல செயலாளர் செ.நன்மாறன், மாவட்ட செயலாளர் ஆ.மதியழகன் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
