வேலூர்:சர்வதேச மகளிர் தின விழாவில் சாதனை மகளிர் விருது வழங்கி பாராட்டு!!!
3/10/2026
0
பொதுநல அறக்கட்டளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், காட்பாடி லயன் சங்கம், பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளை, தோழி பெண்கள் கூட்டமைப்பு, இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் காட்பாடி கிளை இணைந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் உள்ள சேவகன் அறக்கட்டளை வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் எம்.ஈஸ்வரி, வகிதாக்கான், கவிதா, வினோதினி, மகாலட்சுமி, வாலாஜா தையல் ஆசிரியை கவிதா, திவ்யபாரதி, பேபி, ஷாலினி, குமாரி திலகா, அருட்செல்வி ஆகியோருக்கு சிறந்த பெண்மணிக்கான சாதனை மகளிர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் தொழில் முனைவோர் சங்க தையல் பயிற்சி ஆரி ஒர்க் மாணவிகள் மகளிர் முன்னேற்ற ஓவிய ஆவணங்களுக்கு சிறப்பு பரிசுகளை காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். சேவகன் அறக்கட்டளையின் இயக்குனர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காட்பாடி லயன் சங்க தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர், லயன் சங்க சோக்கராமன், தோழி பெண்கள் கூட்டமைப்பின் தலைவி எம். ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பெல்.ரத்தினம், திருமகள் செல்வமணி, சரசி, மண்டல தலைவர் திலகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். தமிழ்நாடு அரசின் மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை துறையின் சார்பாக குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இலவச தையல் இயந்திரம் பெற தேவையான ஆவணங்கள் குறித்து சமூக நல அலுவலர் அருட்செல்வி கருத்துரை வழங்கினார்.மகளிர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
