விழுப்புரம் நகராட்சி 39 வது வார்டில் வாய்க்கால்கள் துர்வரததால் பொதுமக்கள் கடும் அவதி வீட்டிற்குள் மழை நீர் கழிவு நீர் புகும் அபாயம்!!!!
3/24/2026
0
விழுப்புரம் நகராட்சியில் 39 வது வார்டு கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், இ. பி.,காலனி அமைந்துள்ளது. இந்த வார்டில் சாலையின் இருபுறமும் சிமென்ட்டினால் ஆன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவு நீரும், மழை நீரும்தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மழை நீரும், கழிவு நீரும் இறுதியாக கோலியனூரான் கிளை வாய்க்காலில் சென்று சேருவது வழக்கம். இந்நிலையில் இந்த இ.பி., காலனியில் உள்ள நான்கு தெருக்களில் இது போன்ற மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்லும் வாய்க்காலை ஆங்காங்கே அந்தந்த வீடுகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் மண்ணை நிரப்பி அடைத்து வைத்துள்ளனர். இதனால் அண்மையில் பெய்த மழையின் போது கூட மழை நீர் செல்ல வழி இல்லாமல் கழிவு நீருடன் சேர்ந்து பல வீடுகளுக்குள் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்து பொதுமக்களுக்கு சொல்லொனா துயரத்தையும், கடும் இன்னலையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆதலால் விழுப்புரம் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த 39 ஆவது வார்டு இ. பி.,காலணியில் உள்ள நான்கு வீதிகளிலும் உள்ள மழை நீர் வாய்க்கால்களை தூர்வாரி மழை நீரும், கழிவுநீரும் தங்கு தடை இன்றி செல்ல வழி வகையை உடனடியாக செய்து தர வேண்டும் என்று இந்த பகுதி வாழ் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த 39 ஆவது வார்டு இ.பி.,காலனியில் உள்ள நான்கு வீதிகளிலும் வாய்க்கால்களை தூர்வாரி, பராமரிப்பு பணிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
