வேலூர்:காட்பாடி அருகே ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்!!!
3/25/2026
0
தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் ராவ். இவர் தனது காரில் அனகாப்பள்ளியில் இருந்து திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காகத் தனது காரில் திருவண்ணாமலை நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், காட்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில்ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சுப்ரமணியம் ராவின் காரை நிறுத்தி தேர்தல் அலுவலர்கள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது காரில் ரூ. 2 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2 லட்சத்தை அலுவலர்கள் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பாலசுப்பிரமணியர் ராவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
