கோவை:யுனைடெட் நர்சிங் கல்லூரியின் 6 வது பேட்ச் லேம்ப் லைட்டிங் யுனைடெட் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியின் 7 வது பேட்ச் உறுதிமொழி ஏற்பு விழா!!!
3/22/2026
0
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் நர்சிங் கல்லூரியின் 6 வது பேட்ச் லேம்ப் லைட்டிங் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் யுனைடெட் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியின் 7 வது பேட்ச் உறுதிமொழி ஏற்பு விழா கல்லூரியில் நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள யுனைடெட் கல்வி நிறுவங்களின் அங்கமான யுனைடெட் நர்சிங் கல்லூரியின் 6 வது பேட்ச் லேம்ப் லைட்டிங் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் யுனைடெட் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியின் 7 வது பேட்ச் உறுதிமொழி ஏற்பு விழா கல்லூரியில் அமைந்துள்ள சரஸ்வதி அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்ட இந்த விழாவில் யுனைடெட் கல்லூரி குழுமங்களின் இயக்குநர் முனைவர் பி சிவகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். யுனைடெட் கல்வி நிறுவங்களின் நிறுவனர் மற்றும் தலைவர், இன்ஜினியர் எஸ் சண்முகம் தலைமை வகித்து உரையாற்றினார். இதில் இணை தலைவர் முனைவர் மைதிலி சண்முகம், செயலாளர் அருண்கார்த்திகேயன், இணை நிர்வாக அறங்காவலர் திரிசலா குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் சி என் எஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ் ரமேஷ் மற்றும் கோயமுத்தூர் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் ஜானகி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக யுனைடெட் நர்சிங் கல்லூரி 6 வது பேட்ச் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளின் லேம்ப் லைட்டிங் நிகழ்ச்சி கண் கவரும் வகையில் நடைபெற்றது. பின்னர் கல்லூரி முதல்வர் முனைவர் டி ரூபி அனிதா உறுதிமொழி வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல், யுனைடெட் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரி உதவி பேராசிரியர் கீத்து கிருஷ்ணா உறுதிமொழி வாசிக்க 7 வது பேட்ச் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த விழாவில் யுனைடெட் பார்மஸி கல்லூரி முதல்வர் முனைவர் எம் அழகர்ராஜா, யுனைடெட் பிசியோதெர்பி கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ் காயத்திரி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் யுனைடெட் செவிலியர் கல்லூரியின் உதவி பேராசிர்யர் ஜே லீமா நன்றி கூறினார்.முன்னதாக விழாவிற்கு கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் பேண்ட் வாத்தியத்துடன் சிவப்பு கம்பள வரவாற்பு வழங்கினர்.
