திருவண்ணாமலை:செய்யாறு போதையால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழித்து விடும் செய்யாறில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துருவன் செல்வமணி ஆவேசம்!!!
3/23/2026
0
தமிழகத்தில் 'போதையால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழித்து விடும்' என, செய்யாறில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டத்தில் இக்கட்சியில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் துருவன் செல்வமணி ஆவேசமாக பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டசபை தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக குத்தனூர் கிராமத்து சேர்ந்த தமிழ்ச்செல்வன் ( 24 ) அறிவிக்கப் பட்டுள்ளார். வேட்பாளருக்கான அறிமுக பொதுக்கூட்டம் செய்யாறில் நடந்தது. இக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துருவன் செல்வமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வேட்பாளர் தமிழ்ச்செல்வனை மேடையில் அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது; 'தேர்தல் எந்த நாட்டில் உண்மையாக நடக்கிறதோ அந்த நாடு தான் செழிப்பாக இருக்கும். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் - பொதுத் தேர்தல்களை ஏதோ கடமைக்காகவே நடத்தி முடிக்கிறது. சில கட்சியினர் அண்டா - குண்டாக்களை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குகின்றனர். இதை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து வருகிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் இதை வேடிக்கை பார்த்து வருகிறது. விவசாயிகள் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை, வெளியில் எடுத்துச் சென்றால், தேர்தல் ஆணையம் தகுந்த 'பில்'லை கேட்கிறது. எந்த 'பில்'லை கொடுக்கப்பார்கள் விவசாயிகள்.தமிழகத்தில் அடிப்படை கூட தெரியாமல் தேர்தல் விதிமுறைகள் வகுக்கப்படுகிறது. குடிப்பழக்கம் - போதையால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சீரழித்து விடுகிறது. தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு மாறி மாறி ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் கொஞ்ச நாட்களில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றுவிடும். இதை தடுக்க வேண்டும் என்றால், செய்யாறில் 'களம்' இறக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள். 24 வயதுடைய இவர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர், பட்டப் படிப்பையும் முடித்துள்ளார்; இவ்வாறு துருவன் செல்வமணி பேசினார். இக்கூட்டத்தில் மண்டல செயலாளர் சுகுமார், மாநில இளைஞரணி பாசறை ஒருங்கிணைப் பாளர்களான கதிரவன், பஞ்சமூர்த்தி, ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
