வேலூர்:கர்நாடகாமாநிலத்தில்இருந்துஉரியஆவணங்கள்இன்றிஎடுத்துவரப்பட்ட 71ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு பத்தலப்பள்ளி தமிழக ஆந்திர எல்லை பகுதியில் வன சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ. 71 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் தேர்தல் அலுவலர் விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஆஞ்சநேய ரெட்டி என்பதும் இவர் பெங்களூருவில் துணி வியாபாரம் செய்து வருவதாகவும்,அதனால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு துணி வாங்கச் சென்றதாகவும் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top