திருவண்ணாமலை : செய்யாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளராக மு.கோபிக்கண்ணன் நியமனம்!!!!

sen reporter
0

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கீழ்நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மு.கோபிக்கண்ணன். இவர் 1990ம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த கொரோனாவிற்கு முன்பு கீழ்நாயக்கன் பாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அப்பொழுதே ஊராட்சி துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு கீழ்நாயக்கன் பாளையம் ஊராட்சி மக்களிடம் நல்ல செல்வாக்கு இருந்து வந்ததால், கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது மு.கோபிக்கண்ணன் கணிசமான ஓட்டுக்களை பெற்று கீழ்நாயக்கன் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கெல்லாம் காரணம் இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இவரது சிறப்பான அணுகு முறையே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இவரது பணிகள் கிராம மக்களால் போற்றும் அளவுக்கும் இருந்து வருவதால், கட்சி மேலிடம் மு. கோபிக்கண்ணனுக்கு வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவியை கடந்த வாரம் வழங்கி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி தானாகவே வந்து சேரும் என்பதற்கு மு.கோபிக்கண்ணன் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறார். இவரது பணிகள் மேலும் மேலும் சிறக்க வேண்டும் என சக கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் கூறி மு.கோபிக் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கட்சிக்காக எனது பணியை மேலும் சிறக்கும் வகையில் எனக்கு ஒன்றிய செயலாளர் பதவியை வழங்கிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு தனது நன்றியை காணிக்கை யாக்குகிறேன். இதேபோல், தனக்கு பதவி உயர்வுக்கு காரணமாக இருந்து வந்த வி.சி.க.,வின் மண்டல செயலாளர் செ.நன்மாறன், மாவட்ட செயலாளர் ஆ.மதியழகன் ஆகியோருக்கும், கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் ஒன்றிய செயலாளர் மு.கோபிக்கண்ணன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top