வேலூர்:காட்பாடி அருகே கோர விபத்து லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி!!!
3/11/2026
0
காட்பாடி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவரின் தலை லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவஇடத்திலேயேபரிதாபமாகஉயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், நஞ்சுகொண்டாபுரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கவியரசன் (19). இவர் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து, கவியரசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வள்ளிமலையில் உள்ள மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவியரசனின் தலை, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார், கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நண்பரைப் பார்க்கச் சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
