வேலூர்:கெங்கநல்லூர் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் காந்தி பங்கேற்பு!!!
3/12/2026
0
வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கெங்கநல்லூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் திடலில், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 2500 பெண்களுக்கு - இலவச புடவை, 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு - சீருடை , 200 இளைஞர்களுக்கு - விளையாட்டு கிட் (Sports Kit) , 100 நபர்களுக்கு - தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு - சலவை பெட்டி (Iron Box), சலூன் கடை தொழிலாளர்களுக்கு சவரப்பெட்டி, 100 நடைபாதை வியாபாரிகளுக்கு - தள்ளுவண்டி ஆகியவை வழங்கினார். இதில் வேலூர் மாநகர செயலாளர் மற்றும் எம்எல்ஏ ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், வேலூர் ஒன்றிய செயலாளர் சி. எல். ஞானசேகரன், கணியம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் என். கஜேந்திரன், அல்லாபுரம் பகுதி செயலாளர் சி. எம். தங்கதுரை, தொரப்பாடி பகுதி செயலாளர் ஆர். கே. ஐயப்பன், பேரூராட்சி செயலாளர்கள் பி. அருள் நாதன், எம்..ஜாகீர் உசேன், ஆர்.பெருமாள் ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
