திருவண்ணாமலை: செய்யாறுஆலத்தூர் கிராமத்தில் அ.தி.மு.க.,வின் தெருமுனை பிரச்சார கூட்டம்!!!!

sen reporter
0

செய்யாறு அடுத்த ஆலத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன் ஏற்பாட்டில் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த முதற்கட்ட 15 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அளதுறை, ஆலத்தூர், வெங்கோடு உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதிகள் குறித்து, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கிராம மக்களுக்கு எடுத்துக் கூறினர்.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன் செய்திருந்தார்.இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் நதிக்குமார், நகர செயலாளர் வெங்கடேசன், அ.தி.மு.க., பொறுப்பாளர்களான சுப்புலட்சுமி சுப்பராயன், அருண், தவமணி, சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top