வேலூர்:அணைக்கட்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரசு மருத்துவமனை திறப்பு விழா!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அதிநவீன அரசு மருத்துவ மனை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மருத்துவ மனை இயக்குனர், மத்திய ஒன்றிய செயலாளர் பி. வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள் ,கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இந்த அரசு மருத்துவமனை அவசர அவசரமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top