திருவண்ணாமலை:செய்யாறு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பிறந்த நாள் விழா!!!

sen reporter
0

வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் மாமண்டூர் ராஜ் தலைமையில் அமைச்சர் எ. வ. வேலுவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாங்கால் கூட்டுரோட்டில் இயங்கி வரும் 'சமுதாய நலக் கல்வி மையம் மற்றும் மாற்றுத்திறனாளி ஆலோசனை மையத்தில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் காலையில் இனிப்புடன் கூடிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்கள் ஏழுமலை, தயாளன், மதியழகன், ராஜேந்திரன், பாலாஜி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top