சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வகை பள்ளி சீர்காழி ரோட்டரி சங்கத்தின் சார்பில் உபகரனங்கள் வழங்கல்!!!
3/14/2026
0
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் அனைத்து வகை பள்ளிகளை சார்ந்த எட்டு பள்ளிகளுக்கு சீர்காழி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேர்மை அங்காடி பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பொருட்களையும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அமைத்துக் கொடுத்து நேர்மை அங்காடியினை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்கத்தின் இவ்வாண்டின் தலைவர் பி.நடராஜன் தலைமை வகிக்க, ரோட்டரி துணை ஆளுநர் பி.பாலமுருகன். பட்டுக்கோட்டை தாமஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில், ரோட்டரிமண்டல முதன்மை அதிகாரி விருதை ஏ.கே.ஜாகிர் ஹுசைன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து அங்காடிகளையும் திறந்து வைத்து மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.எஸ். என். ராஜ் கமல்.சுபம் வித்யா மந்திர் பள்ளி தாளாளர் ஜி. சுதீஷ் ஜெயின். சென் ஜோசப் பள்ளி முதல்வர் ரெக்சலின் மேரி.ச.மு. இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமன். டார்கெட் லைன்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி முதல்வர் டி. சுரேஷ் , நகராட்சி தொடக்கப்பள்ளி தாடாளன் மேற்கு பள்ளி தலைமையாசிரியர் எல். ஆரோக்கிய செல்வி, ஆசிரியர் மாலதி.சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ். செல்வி ஆகியோர் ஏற்பாட்டின் படி மேற்கண்ட எட்டு பள்ளிகளில் நேர்மை அங்காடியானது தொடங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் சீர்காழி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன். கண்ணன், பாலமுருகன், ராஜேந்திரன் போன்றோர்களும், வருங்கால சங்கத் தலைவர் ஏ.சண்முகம், சங்க உறுப்பினர்கள் சூரத் கணேசன் கண்ணன் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பட்டனர், நிறைவாக ரோட்டரி சங்க உறுப்பினர் வசந்த் குமார் பட்டேல் நன்றி கூறினார்.
