திருவண்ணாமலை:செய்யாறு நற்பண்புகளுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர் அறிவுரை!!! ​

sen reporter
0

நாட்டில் சிறந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. 'நற்பண்புகளுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது என, செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியின் ஆண்டு விழாவில் உளவியல் நிபுணர் பிரசித்த மணிகண்டன் உருக்கமாக பேசினார்.செய்யாறில் உள்ள இந்தோ அமெரிக்கன் பள்ளியின் 21வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு ​பள்ளியின் தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் துணை முதல்வர் க.கோவேந்தன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர் பிரசித்த மணிகண்டன் பேசுகையில், மாணவர்களின் உடல்நலம் மற்றும் சரிவிகித ஊட்டச்சத்து அவசியமானது. நற்பண்புகளுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்குதான் உள்ளது. நாட்டில் ஒழுக்கம் - சிறந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருவது வருத்தத்தை அளிக்கிறது. ஒரு மாணவன் நல்லவனாக வருவதும் - தவறான பாதைக்கு செல்வதும் பெற்றோர்  ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது' . இவ்வாறு பிரசித்த மணிகண்டன் பேசினார்.பள்ளியின் முதல்வர் அ.பா.சையத் அப்துல் இலியாஸ், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்தும், பொதுத் தேர்வுகளில் பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி குறித்து விளக்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கற்பகம் மற்றும் பானுமதி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். லதா ஸ்ரீதர், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுதா கார்த்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற - சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வியாளர் மணிகண்டன் பரிசுகளை வழங்கினார். ஆரம்பக் கல்விப் பொறுப்பாளர் செல்வமணி நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top