வேலூர்:திமுகஅரசைகண்டித்துஅதிமுககூட்டணிகட்சிகள்சார்பில்கண்டனஆர்ப்பாட்டம்!!!

sen reporter
0

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும்பாலியல்வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதை பொருட்கள் தாராள புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய நிர்வாக திறன் அற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம். பி .யுமான டாக்டர் மு. தம்பிதுரை தலைமை வகித்தார். வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் ராமு , புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் கைத்தறி காவலன் ரமேஷ், முன்னாள் அதிமுக கவுன்சிலர் காட்பாடி செங்குட்டை குமார், அதிமுக வட்ட செயலாளர் காட்பாடி திருவள்ளுவர் நகர் எழிலரசன், ஜெ.,பேரவை காட்பாடி பாலாஜி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top