வேலூர்:ஒடுகத்தூரில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா!!!
3/13/2026
0
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்களுடன்,வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி ஒடுகத்தூர் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா நடந்தது. விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ,அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து ,புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, பேரூராட்சி செயலாளர் ஆர்.பெருமாள் ராஜா, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், பொது குழு உறுப்பினர் மணிமாறன், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
