வேலூர்:குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை!!!
3/21/2026
0
ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த சிறப்பு தொழுகையில் அதிமுக நகர செயலாளர் ஜே. கே. என். பழனி, மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி ஆகியோர் இஸ்லாமிய பெருமக்களுடன் தொழுகையில் கலந்து கொண்டு ஹபீப் டானிங் பேக்டரி, எஸ். பீடி குழுமத்தின் ஆலி ஜனாப் ஏ.முகம்மது ஆமின்சாஹிப்,, ஏ.முகம்மது அசரப், ஏ. முகம்மது, ரகுமான் ஆகியோருக்கு சால்வை அணிவித்து ஒருவரையொருவர் ஆர கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் நகர மன்ற துணைத்தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, எஸ். ஐ. அன்வர் பாஷா, வி. இ. கருணா, ஆர்.ரவிச்சந்திரன், எல். ஏ. அன்பழகன், ஏ.சிட்டிபாபு,கோல்ட் வி. குமரன், டிஷ் மோகன், பரமாத்மா, தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
