கோவை:சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது!!!

sen reporter
0

தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் சுனில் குமார் யாதவ், சஞ்சய் குமார், பிரஞ்சல் யாதவ், யசேந்திர சிங், காவல் கண்காணிப்பு பார்வையாளர் சுதீர்குமார், செலவின கண்காணிப்பு பார்வையாளர் ரோகிணி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முன்னிலையில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தற்போது வரை கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ள தேர்தல் பணிகள் திட்டமிடல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அலுவலர்களும் பங்கேற்று தற்போது வரை அந்தந்த சட்டமன்ற தொகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விவரித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top