வேலூர்:பேரணாம்பட்டில் அறிஞர் அண்ணா துரையை மறந்த அதிமுகவினர்!!!
3/10/2026
0
நேற்றைய முன் தினம் பேரணாம்பட்டு நகர அதிமுகவினர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகித்து வந்தனர். அந்தத் துண்டு பிரசுரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ஜான் பாண்டியன், பாவேந்தர், ஜி. கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வேலழகன் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. பொதுவாக அதிமுக நோட்டீஸ்களில் அறிஞர் அண்ணாதுரையின் படங்கள் இடம்பெறும். ஆனால் இந்த துண்டு பிரசுரத்தில் பெரியார், அண்ணா படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது பேரணாம்பட்டு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
