திருவண்ணாமலை:செய்யாறில் தி.மு.க. வழக்கறிஞரின் புதிய அலுவலகத்தை தரணிவேந்தன் எம்.பி. ஜோதி எம்.எல்.ஏ. திறப்பு!!!

sen reporter
0

செய்யாறில் தி.மு.க., வழக்கறிஞரின் புதிய அலுவலகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் திறந்து வைத்து, நிர்வாகிகள் - பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தி.மு.க.,வின் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளரும்  வழக்கறிஞருமான சுந்தர் கருணாநிதி இருந்து வருகிறார். இவர், செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில், தனக்கென வழக்கறிஞருக்கான புதிய அலுவலகத்தை தொடங்குவதற்கான பணிகளையும் செய்து முடித்திருந்தார். இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிர்வாகிகள் - பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்களான என்.சங்கர், ஞானவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், தி.மு.க., நிர்வாகிகளான கவுன்சிலர் க.கோவேந்தன், வினோத்குமார், வந்தவாசி ஏ.பிரபு, ராணி, தெள்ளார் கோபி, டி.வி.ஜி.இளங்கோ, செம்பூர் மஞ்சுநாதன், தெள்ளார் வல்லரசு, வந்தவாசி அரவிந் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்யாறு அண்ணா நகரில் உள்ள ஏகம்பன் நிறுவனத்தையும் தரணிவேந்தன் எம்.பி., ஜோதி எம்.எல்.ஏ.ஆகியோர் திறந்து வைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top