திருவண்ணாமலை: வந்தவாசி தனி தொகுதிக்கு அ.தி.மு.க., சார்பில் மாவட்ட துணை செயலாளர் விமலா மகேந்திரனுக்கு சீட்!!!!

sen reporter
0

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு எந்த தொகுதி யார்? யாருக்கு உள்ளிட்ட பணிகள் வேகமாக போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சில கூட்டணி கட்சிகளில் தொகுதி பங்கீடு தற்போது தான் தொடங்கியது. தி.மு.க.,வில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இன்னமும் வெளிப்படையாக பேசவில்லை.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட வந்தவாசிதனித் தொகுதி குறித்து மேலிடம் என்ன நினைக்கிறது. உள்ளூர் கட்சி பொறுப்பாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை பார்ப்போம். 'கடந்த இரண்டு சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியை தி.மு.க., கைப்பற்றி அங்கம் வகித்து வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு தான் 'டிக்கெட்' கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க.,வின் பொறுப்பாளர்கள் - நிர்வாகிகள் அப்போது பிடிவாதமாக இருந்து வந்தனர். இதனால், திருவண்ணாமலையின் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோரின் பேச்சு அந்தந்த தேர்தல் சமயங்களில் எடுபடவில்லை என்பதுதான் உண்மை. ஒருவழியாக கட்சித் தலைமை வந்தவாசி தனி தொகுதிக்கு உட்பட்ட உள்ளூரைச் சேர்ந்த வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. ஆனால், இவர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து தோல்வியைத்தான் தழுவினர். இந்த முறை வந்தவாசி தனி தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்றியே ஆக வேண்டும் என, முடிவில் இறங்கிவிட்டது. வந்தவாசி ( தனித் ) தொகுதியை கூட்டணிக்கும் ஒதுக்க கூடாது என, கட்சியினர் பேசி வருகின்றனர் இந்த தொகுதியில் தற்போது பெண் வேட்பாளரை இறக்கி வெற்றி வாகை சூட வேண்டும் என, கட்சி  முடிவு எடுத்துள்ளது. இத்தகவலை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகனுக்கு ரகசியமாக தெரிவித்துள்ளதாம். கூடவே, திருவண்ணாமலை அ.தி.மு.க.,வின் வடக்கு மாவட்டத்தில்  பெண் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த வரிசையில் மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதலிடத்தில் இருப்பவர் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவராக பதவி வகித்தவரும், தற்பொழுது திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.,வின் இணைச் செயலாளருமான விமலா மகேந்திரன் பெயர் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பி.எஸ்சி., பட்டப் படிப்பு முடித்த இவரை 'களத்தில்' இறக்க கருத்தும் கேட்கப்பட்டு வருகிறது. இவரை வேட்பாளராக கட்சி தலைமை அறிவிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top