கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மக்களிடம் கேட்டு பெற்ற கருத்துக்களை பெற்றுக் கொண்டார்!!!

sen reporter
0

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மக்களிடம் கேட்டு பெற்ற கருத்துக்களை பெற்றுக் கொண்டார்.இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பலமுறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த முறை தனித்துவமாக கார்த்திக் சிதம்பரம் இந்த குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ எந்தெந்த தேவைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் கூட்டணி தலைவரிடம் வலியுறுத்தி நிறைவேற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார். தற்பொழுது உள்ள பல்வேறு இலவச திட்டங்கள் பொதுமக்களுக்கும் குறிப்பாக மகளிர்க்கும் உதவிகரமாக இருப்பதாகவும் இனியும் பல்வேறு மகளிர் சார்ந்த விஷயங்கள் குறித்தான கோரிக்கைகள் ஆதிதிராவிடர் மக்களின் பட்டாக்கள் குறித்தான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம் என தெரிவித்தார். மேலும் அரசுக்கு எதிரான சில செய்திகள் வரும்பொழுது தேவையான இடத்தில் திமுகவிற்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் திமுகவினர் பேசுகிறார்கள் என்பதற்காக நாங்கள் பேசாமல் இருப்பதில்லை நாங்கள் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கூறி வருவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் துணை என்பது நம்முடைய மாநில அரசுக்கு கிடைப்பதில்லை என்பது உண்மைதான் வருகின்ற காலத்தில் பாராளுமன்றத்தில் அதனை வலியுறுத்தி நம்முடைய மாநிலத்திற்கு அதனை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.வருகின்ற 30ம் தேதிக்குள் அனைத்து கருத்துகளையும் ஒன்றிணைத்து அதில் முக்கியமான கோரிக்கைகளை அச்சடித்து வீடு வீடாக கொடுக்க இருப்பதாகவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை கார்த்திக் சிதம்பரம் தலைமையில் வலியுறுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று இரவிற்குள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கருத்துக்களை கொடுக்க வேண்டும், தேர்தல் அறிக்கை என்பது முப்பதாம் தேதி வரலாம் திமுக தேர்தல் அறிக்கை வரும் பொழுது எங்களுடைய தேர்தல் அறிக்கையும் வெளிவரும் என தெரிவித்தார். தற்பொழுது பல்வேறு இளைஞர்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, இலவசங்கள் என்பது ஒரு சில மேல் தட்டுக்காரர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் கீழ்த்தட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அந்தத் திட்டங்கள் சென்றடையும் பொழுது அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அந்த இலவசங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்று கீழ் தட்டு மக்களுக்கு தான் தெரியும் என கூறிய அவர் இவ்வாறு இலவசங்கள் வேண்டாம் என்று கூறுவதெல்லாம் அரசியலுக்காக சொல்லப்படக்கூடிய கருத்து தான் என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top