வேலூர்:காட்பாடி கல்புதூரில் மழலையர் பள்ளி ஆண்டு விழா காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் ஜனார்த்தனன் பரிசுகள் வழங்கல்!!!!

sen reporter
0

காட்பாடி மெட்டுக்குளம் இஹன்ட் மழலையர் பள்ளியின் ஆண்டு விழா கல்புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் பிரித்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஹீரா வரவேற்று பேசினார்.காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.சுதாகர், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி பேசினர்.கடந்த ஒரு ஆண்டில் குழந்தைகள் கற்றல், திறமை, ஒழுக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் பெற்ற வளர்ச்சியை கொண்டாடும் நாள் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பல்வேறு நடனம், பாடல், நாடகம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், குழந்தைகளின் முயற்சி மற்றும் சாதனைகளை பாராட்டும் விதமாக விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top