காஞ்சிபுரம்:ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் தண்டலம் கிராமத்து குளம் ரூ. 1.75 கோடியில் சீரமைப்பு!!!

sen reporter
0

காஞ்சிபுரம் அடுத்த தண்டலம் கிராமத்து குளத்தை ஹூண்டாய் மோட்டார் அறக்கட்டளை சார்பில் ரூ. ஒரு கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்க வளாகத்தில் ஹூண்டாய் மோட்டார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து வழங்கி வருகிறது. கடந்த கொரோனா காலத்திலும் ரூ. கோடிக் கணக்கான மதிப்பீட்டில் உணவுப் பொருட்களை கிராமமாக வழங்கியது. அப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்.தற்பொழுது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குன்றத்தூர் எல்லையில் உள்ள தண்டலம் கிராமத்துக்கு பெரிய குளத்தை சீரமைத்து அழகு படுத்தி உள்ளது. இந்த குளத்து கரையில், நடைபாதை பயிற்சி களமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளன.இது தவிர குளத்தை சுற்றுச்சுவருடன் எல்.இ.டி., மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் திருவிழாவில் ஜொலிக்கின்றன. அழகு மிகுந்த இந்த குளத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மூத்த மாவட்ட அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராமமக்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து தண்டலம் ஊராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top