வேலூர்:ஆசிரியர் ஜனார்த்தனன் இல்ல திருமண வரவேற்பு விழா விஐடி வேந்தர், துணைத் தலைவர், மேயர் உள்ளிட்டோர் வாழ்த்து!!!

sen reporter
0

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவரும், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவருமான முனைவர். செ.நா.ஜனார்த்தனன் உடன் பிறந்த சகோதரர் குப்புசாமி -சுஜாதா இல்ல மணமக்கள் செ. கு. நேஹா - சாஹில் திருமண வரவேற்பு விழா வேலூர் ஹோட்டல் கண்ணா மாங்கல்யம் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவிற்கு புதுடெல்லி செ.நா.குப்புசாமி, சுஜாதா, லண்டன் அஜித், பாட்டியா, ஊர்வசி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக முனைவர் செ. நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். ஜி. விஸ்வநாதன் மணமக்களுக்கு தூய தமிழ் பெயர்கள் என்ற நூலினை பரிசாக வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: சமூக ஆர்வலர் மற்றும் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வரும் ஜனார்த்தனன் உடன் பிறந்த சகோதரர் குப்புசாமி இல்ல நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மணமக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயலாற்றி பல்வேறு நலன்களை பெற்று வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும் பெற்றோர்களை பேணி பாதுகாக்கும் பணியினையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார். உடன் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன், வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஹோட்டல் கண்ணா குழும ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். ரத்தினகிரி அருள்மிகு. பாலமுருகன் திருக்கோவில் பாலமுருகனடிமை சுவாமிகள் அருளாசி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்தார். இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம், சீனந்தல் மடாலயம் விஸ்வகர்ம ஜகத்குரு சிவராஜ நாச்சியார் குரு சுவாமிகள் அருளாசி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.  தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஆறுமுகம், துணைத் தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், சேகர், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம், மாநில செயலாளர் பா.ரவி, மாவட்ட பொருளாளர் பி.ஞானசேகரன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ஞானசேகரன், அஞ்சல் ஆர். எம். எஸ். ஓய்வூதியர் சங்க மாநில செயல் தலைவர் கதிர் அகமது, மோகன், நரசிம்மன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, அமைப்புச் செயலாளர் எஸ்.சம்பத், மாவட்ட பொருளாளர் எம்.பாண்டுரங்கன், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், காட்பாடி கிளை அவை துணைத் தலைவர் ஆர்.விஜயகுமாரி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ் குமார் ஜெயின், வி காந்தியலால் பட்டேல், பி.என்.ராமச்சந்திரன், ஏ.ஸ்ரீதரன், ஆனந்தகுமார், பொருளாளர் வி.பழனி, ராணிப்பேட்டை மாவட்ட அலுவலர் பி.சுமதி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் இரா.செந்தில்குமார், நண்பர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் எல். பன்னீர்செல்வம், ம.அன்பரசு கோ.சுவாமிநாதன், சு.சோமாஸ்கந்தன், தேவராஜன், குப்பன், ஒய்.யோகேஷ் குமார், போளூர் சுசி சரவணன், கண்ணமங்கலம் சோமசுந்தரம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.விஸ்வநாதன், பெ.ராமு, பே. அமுதா, இல.சீனிவாசன், ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், துரை கருணாநிதி, ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோபால ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோ. பழனி, தலைமை ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். எஸ். சிவவடிவு , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆர் .ராஜேஸ்வரி, வேலூர் காளிகாம்பாள் ஆலய குருக்கள் ஜோதி முருகாச்சாரி, வேலூர் பேரிபேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆலய குருக்கள் உமாபதி, வாலாஜாபேட்டை காளிகாம்பாள் ஆலய அறக்கட்டளை தலைவர் பாலகுமார் ஆச்சாரி, குடியாத்தம் காளியம்மன் காளிகாம்பாள் ஆலய நிர்வாகிகள் வி.பி.மோகனவேல் ஆச்சாரி, கே. என். பாஸ்கராச்சாரி, கே.குணசேகரன், விரிஞ்சிபுரம் காளிகாம்பாள் ஆலய நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள், தோழமை சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.விழா ஏற்பாடுகளை குடும்ப உறுப்பினர்கள் செ.ஜ. சோமசுந்தரம், உமா மகேஸ்வரி, கா.சக்கரவர்த்தி, டி. சங்கர், எஸ். ஈஸ்வரி, ஜி. மதிவாணன், எம். சாந்தி, சா. பாலசுப்பிரமணியன், ரேவதி, சா .கோபாலகிருஷ்ணன், நிர்மலா, சா. பாலமுருகன், சா. கலைவாணி, எம். ரகுராம், எம். ஹரிப்பிரியா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.முடிவில் செ. நா.முத்துசாமி, சியாமளாதேவி ஆகியோர் நன்றி கூறினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top