கோவை:ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் Third Eye – A Center for Autism மற்றும் Go Blue இயக்கம் இணைந்து “Navigating Autism Together!!!

sen reporter
0

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் Third Eye – A Center for Autism மற்றும் Go Blue இயக்கம் இணைந்து “Navigating Autism Together” என்ற நிகழ்ச்சியை இன்று கோயம்புத்தூரிலுள்ள IMA ஹாலில் நடத்தின.இந்த நிகழ்ச்சியில் ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் பாரம்பரிய விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம், K.G. மருத்துவமனை தலைவர் கலந்து கொண்டு, ஆட்டிசம் குறித்த ஆரம்ப கட்ட சிகிச்சையின் அவசியம் மற்றும் விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார்.அதேபோல், சிறப்பு விருந்தினராக பார்க் கல்வி குழும சி. இ.ஓ டாக்டர் அனுஷா ரவி, கலந்து கொண்டு, உள்ளடக்கமான கல்வி மற்றும் நியூரோடைவெர்ஸ் குழந்தைகளுக்கான கல்வி ஆதரவு குறித்து கருத்துகளை பகிர்ந்தார்.மேலும், நிகழ்ச்சியில் பிரபல விருந்தினர்களான தொகுப்பாளினி அர்ச்சனா சந்தோக் மற்றும் சின்னதிரை நடிகர் அமித் பார்கவ் ஆகியோர் கலந்து கொண்டு, ஆட்டிசம் குழந்தைகளை புரிந்து கொள்ளும் மனிதநேய பார்வையை எடுத்துரைக்கும் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சி மூலம் ஆட்டிசம் குறித்த சமூக விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆதரவான சூழல் உருவாகும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top