கோவை:புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களாக 27 பேரை அறிவித்த அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வரும் ஏப்ரல் 2 ம் தேதி 3 ம் கட்ட பட்டியலையும் அறிவிக்க போவதாக தெரிவித்தார்!!!

sen reporter
0

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி , சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.ஏற்கனவே முதல்கட்டமாக 43 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக27 வேட்பாளர்களின் பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,வரும் 6 ம் தேதி அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம் என தெரிவித்தார். போட்டியிடும் தொகுதிகளில்கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பெறுவோம் என தெரிவித்த அவர்,தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் எவ்விதமான பாரபட்சம் இன்றி நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.அனுமதி கொடுப்பதில், மனு தாக்கலின் போது ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது கூடாது எனவும் , மனு தாக்கல் செய்யும் போது இடையூறு இன்றி மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்,21 ம் தேதி மாலை 6 மணிக்கு பின்பு பணப்பட்டுவாடா மிக அதிகமாக நடக்கும் நிலையில், நேர்மையாக , நியாமாக தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.புதிய தமிழகம் கட்சியின் சார்பில்தேர்தல் அறிக்கை வரும் 3 ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த அவர்,புதிய தமிழகம் போட்டியிட்டு சில இடங்களில்தேசிய ஜனநாயக கூட்டணியையும் , சில இடங்களில் திமுகவையும் தோற்கடிப்போம் எனவும்,தேர்தல் களத்தில் எதிரிகளாக இருப்பவர்களை வெல்வோம் எனவும் தெரிவித்தார்.புதிய தமிழகத்திற்குவெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகள் குறித்த இப்போது சொல்ல முடியாது என தெரிவித்த அவர்,தமிழகத்தில் வித்தியாசமான முறையில் புதிய தமிழகம கடசி களமாடுவோம் என தெரிவித்தார்.புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் 3 வது வேட்பாளர்கள் பட்டியலும் வரும் என தெரிவித்த அவர்,இன்னும் கூடுதலாக 10 தொகுதிகள் வரை போட்டியிட கூடும் எனவும், வரும் 2 ம் தேதி மூன்றாவது கட்ட பட்டியலை வெளியிடுவோம் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top