கோவை:துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் விஸ்வநாதபுரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு!!!
4/01/2026
0
கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட், ஸ்ரீ கணபதி மார்ட், கண்ணன் ஜீப்லி காபி, எம் ஆர் என் வாட்டர் சப்ளை மற்றும் ஜி வி வாட்டர் வாஸ் உள்ளிட்டோர் இணைந்து 2 வது ஆண்டாக கோடை வெய்யிலில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.கோடை வெய்யிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆண்டு தோறும் துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை, ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட், ஸ்ரீ கணபதி மார்ட், கண்ணன் ஜீப்லி காபி, எம் ஆர் என் வாட்டர் சப்ளை மற்றும் ஜி வி வாட்டர் வாஸ் உள்ளிட்டோர் இணைந்து ஏப்ரல் மற்றும் மே மாதம் என 2 மாதங்கள் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர்.அதேபோல் 2 வது ஆண்டாக கோவை மேட்டுப்பாளையம் சாலை விஸ்வநாதபுரத்தில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர். நீர் மோர் பந்தலை துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை தலைவர் சிரவை ஆதினம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் திறந்து வைத்தார்.சிறப்பு பூஜை செய்து தொடங்கப்பட்ட நீர் மோர் பந்தலில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர். அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி பருகிச் சென்றனர். தினமும் சுமார் 1000 லிட்டர் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.முன்னதாக விஸ்வநாதபுரம் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோவிலில் நீர் மோர் மற்றும் தர்பூசணி ஆகியவைகளை ஆஞ்சநேயருக்கு படைத்து சிறப்பு பூஜைகள் செய்து அங்கு வந்த பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் துடியலூர் மணியன் குளம் காளியம்மாள் அறக்கட்டளை செயளாலளர் வி கே சண்முகம், பொருளாளர் டி எஸ் சுந்தரம், கணபதி மார்ட் நிர்வாக இயக்குநர் கணபதி, பொது மேலாளர் அகிலன், ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் தலைவர் பி சுப்பிரமணியன், செயலாளர் இளங்கோவன், அறங்காவலர் குழு கவிச்சந்திர மோகன், நிர்வாகிகள் தம்புராஜ் என்கிற காளிச்சாமி, எம் ஆர் என் வாட்டர் சப்ளை நாகராஜ், ஜி வி வாட்டர் வாஸ் உரிமையாளர் ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
