வேலூர்:காட்பாடி அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த 54,600 ரூபாய் பறிமுதல்!!!

sen reporter
0

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அல்லூரி ஹரி பிரசாத். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதற்காகத் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடி அருகே கார் வந்தபோது, அங்கு கணியம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் Deputy BDO சதீஷ்குமார் தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஹரி பிரசாத்தின் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத 54,600 ரூபாய் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், தேர்தல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top