திருவண்ணாமலை:செய்யாறுதொகுதிஅ.தி.மு.க.வேட்பாளர்முக்கூர்சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு!!!

sen reporter
0

செய்யாறு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியம் சித்தாத்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, கிராம மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். செய்யாறு சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க.வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் செய்யாறு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சித்தாத்தூர், கீழ்நெல்லி, பில்லாந்தாங்கல் உள்ளிட்ட 20 கிராமங்களில் நேற்று தனது கட்சி பொறுப்பாளர்கள், கூட்டணிக்கு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குகளை சேகரித்தார். வெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூலன் ( எ ) பையா குட்டி ஏற்பாட்டில் ஓட்டு கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சித்தர் கிராம மையத்தில் உள்ள சுப்பிரமணி சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்தில் வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதையடுத்து வேட்பாளருக்கு கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்றனர். கிராம பெண்களிடம் வேட்பாளர் கைகுலுக்கி வாக்குகளை சேகரித்தார். பின்னர் தேர்தல் அறிக்கை குறித்து விவரித்து பேசினார்.கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், வேட்பாளருக்கு சால்வையும் - ஆளுயர மாலை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன், சி.துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணிகிலுப்பை காயத்திரி சுதர்சன், பல்லாவரம் பிரதீஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top