வேலூர்:தவெக வேட்பாளர் வினோத் கண்ணனுக்கு நாஞ்சில் சம்பத் ஓட்டு சேகரிப்பு!!!
4/13/2026
0
வேலூர் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடும் வினோத் கண்ணன், வேலூர் மாநகராட்சி பகுதிகளான சாய்நாதபுரம், தொரப்பாடி பகுதிகளில் காலை வேளையில் வாக்காளர்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரித்தார்.மாலையில், வினோத் கண்ணனுக்கு ஆதரவாக பட்டிமன்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சிறந்த ஜீப்பில் சென்று சாய்நாதபுரம், தொரப்பாடி, அல்லாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழக வேலூர் பகுதி செயலாளர் நிதின், ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
